ராசிபுரத்தில் ஈ.வெ.ரா. மணியம்மையாருக்கு வீரவணக்க நிகழ்ச்சி

ராசிபுரம் நகர திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க வீராங்கனையும்

Update: 2017-03-16 22:30 GMT

ராசிபுரம்,

ராசிபுரம் நகர திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க வீராங்கனையும், தந்தை பெரியாரின் துணைவியாருமான ஈ.வெ.ரா. மணியம்மையாரின் 39–வது ஆண்டு வீரவணக்க நிகழ்ச்சி கட்சி அலுவலகம் முன்பு நடந்தது. அதையொட்டி மணியம்மையாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர அமைப்பாளர் இரா.பிடல்சேகுவேரா தலைமை தாங்கினார். புரட்சிகர இளைஞர் அணி முன்னணியை சேர்ந்த பாலகிருஷ்ணன், திராவிடர் விடுதலை கழகத்தை சேர்ந்த சுமதி, மலர், கோல்டன் நற்பணி சங்கத்தலைவர் குபேர்தாஸ், ம.தி.மு.க.வைச் சேர்ந்த கைலாஷ், கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்