7–வது ஊதியக்குழு குறைகளை சரிசெய்யக்கோரி மத்திய அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தபால், வருமானவரி அலுவலகங்களில் பணி பாதிப்பு
7–வது ஊதியக்குழுவில் உள்ள குறைகளை சரிசெய்யக்கோரி மத்திய அரசு ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர்,
7–வது ஊதியக்குழுவில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசு ஊழியர்கள் நாடு முழுவதும் நேற்று அடையாள வேலை நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து இருந்தனர்.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் தபால் துறை, வருமானவரித்துறை ஊழியர்கள் மட்டும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் தபால் துறையில் உள்ள 847 ஊழியர்களில் 654 பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் தபால் கிளை அலுவலக சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. நகர்ப்புறங்களிலும் தபால் பட்டுவாடா பணி நடைபெறவில்லை.
90 சதவீதம் பேர் வரவில்லைவருமானவரித்துறையை பொறுத்தமட்டில் விருதுநகர் வருமானவரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்களில் 90 சதவீதம் பேர் பணிக்கு வரவில்லை.
இதனால் வருமானவரித்துறை அலுவலகத்தில் பணி பாதிப்பு ஏற்பட்டது. மத்திய சுங்க இலாக்கா, வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை உள்ளிட்ட அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை.