ஜிப்மர் மருத்துவமனையை மத்திய அரசு ஏற்க வேண்டும்: ஊழியர்கள் சங்கம் தீர்மானம்

ஜிப்மர் மருத்துவமனையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.

Update: 2017-03-15 23:00 GMT

புதுச்சேரி

ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்க தலைவர் தட்சணாமூர்த்தி, பொதுச்செயலாளர் ஸ்ரீகாந்த் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:–

7–வது ஊதியக்குழு பரிந்துரையின்படி புதிய ஊதியத்தை அமல்படுத்த வலியுறுத்தினோம். அதன் அடிப்படையில் புதிய ஊதியம் தரவும், பதவி மறு கட்டமைப்பு, மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்று ஊதிய மாற்று விகிதத்தை அமல்படுத்துவதுடன் மத்திய அரசின் ஒப்புதல் பெற்று காலியாக உள்ள அனைத்து பணி இடங்களையும் நிரப்பவும் ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் உறுதி அளித்துள்ளார்.

மத்திய அரசு ஏற்க வேண்டும்

ஜிப்மரில் முக்கியப் பேராசிரியர்கள் 30–க்கும் மேற்பட்டோர் செக்யூரிட்டி பிரிவு, பண்டக சாலை, வாகனப் பணிமனை, பண்டக சாலை, பணிமனை ஆகிய நிர்வாக பணிகளில் ஈடுபட்டு உள்ளனர். சாதாரண ஊழியர்கள் செய்யும் வேலையை பல லட்சம் ரூபாய் ஊதியம் வாங்கும் டாக்டர்கள் செய்வது கண்டிக்கத்தக்கது. எனவே பேராசிரியர்கள் மீண்டும் மருத்துவப் பணிக்கு திருப்பி அனுப்ப ஜிப்மர் நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

தன்னாட்சியாக இயங்கும் ஜிப்மர் மருத்துவமனையை, மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நடவடிக்கை தொடர்பாக அனைவரும் ஏற்பு கடிதம் வழங்க மருத்துவமனை ஊழியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஜிப்மர் மருத்துவமனையை மீண்டும் மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதை வரவேற்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்