அக்காள்மடம் அருகே 70 கிலோ கஞ்சா பதுக்கிய வாலிபர் கைது

70 கிலோ கஞ்சா பதுக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-15 22:45 GMT

ராமேசுவரம்,

ராமேசுவரத்தை அடுத்துள்ள அக்காள்மடத்தில் இருந்து குந்துகால் கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு இடத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கென்னடி தலைமையிலான கியூ பிரிவு போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அவற்றில் 70 கிலோ எடைகொண்ட கஞ்சா பார்சல்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக தங்கச்சிமடம் வ.உ.சி. தெருவை சேர்ந்த குருநாதன் (வயது 38) என்பவரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் குருநாதனும், அவருடைய நண்பர் ஜெயச்சந்திரன் என்பவரும் மோட்டார் சைக்கிளில் கஞ்சா பார்சல் மூடைகளை எடுத்துச்சென்று பதுக்கி வைத்ததாகவும், அவற்றை இலங்கைக்கு படகு மூலம் கடத்த திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்தார்.

கைது

இதுதொடர்பாக பாம்பன் போலீசார் வழக்குப்பதிவு செய்து குருநாதனை கைது செய்தனர். பின்னர் குருநாதன், கஞ்சா மூடைகளுடன் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதில் தொடர்புடைய ஜெயச்சந்திரனை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்