இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொங்கவிட்டதாக உறவினர்கள் புகார் விசாரணை கோரி மனு

பூதப்பாண்டி அருகே தற்கொலை செய்துகொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள இளம்பெண்ணை கொன்று தூக்கில் தொடங்கவிட்டதாக உறவினர்கள் புகார் கூறி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2017-03-15 23:15 GMT
நாகர்கோவில்,

பூதப்பாண்டி அருகேஉள்ள திட்டுவிளை தைக்கா தெருவை சேர்ந்தவர் அபுதாகீர். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ஜெரினா (வயது 21). இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜெரினா கடந்த 13–ந்தேதி வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் ஜெரினாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனு அளித்தனர்.

கொலை செய்து...


அந்த மனுவில், ‘ ஜெரினாவை கடந்த 20–5–2015 அன்று அபுதாகீர் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்தோம். திருமணத்தின்போது 35 பவுன் நகை மற்றும் சீர்வரிசைகள் பெற்றுக்கொண்டனர். இருப்பினும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஜெரினாவை சித்திரவதை செய்தார்கள். ஜெரினாவின் வாழ்க்கையை கருதி நாங்கள் பொறுமையாக இருந்தோம். தற்போது ஜெரினாவை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டனர். அதன் பிறகு ஜெரினா தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடி வருகிறார்கள். எனவே ஜெரினா இறப்பு குறித்து உரிய முறையில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்