கிணற்றில் தவறி விழுந்த 10–ம் வகுப்பு மாணவன் சாவு
ஆரல்வாய்மொழி அருகே பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த 10–ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.
ஆரல்வாய்மொழி,
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பாப்பான்குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் வெட்டும் பெருமாள். இவர் வடக்கன்குளத்தில் ஒரு தனியார் கல்லூரியில் வேலைபார்த்து வருகிறார். கல்லூரி அருகே குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகன் காளிதாஸ் (வயது 16). வடக்கன்குளத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தார்.
மாணவன் காளிதாஸ் நேற்று முன்தினம் இரவு ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து நேற்று காலை காளிதாசும் வேறு இரண்டு வாலிபர்களும் குமாரபுரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற பாதையோரம் ஒரு பாழடைந்த கிணறு இருந்தது. அந்த கிணற்றின் கரையோரம் சென்ற காளிதாஸ் கிணற்றுக்குள் எட்டி பார்த்தான்.
பரிதாப சாவு
அப்போது, எதிர்பாராதவிதமாக காளிதாஸ் கிணற்றுக்குள் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.
இதைபார்த்து அவனுடன் சென்ற 2 வாலிபர்களும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் ஊருக்குள் சென்று உறவினர்களிடம் தகவல் கூறினர். அதைத்தொடர்ந்து காளிதாசின் உறவினர்கள், நாகர்கோவில் தீயணைப்பு படை, மற்றும் ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் கூறிவிட்டு சம்பவ இடத்திற்கு சென்றனர்.
இதற்கிடையே நாகர்கோவில் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி காளிதாசின் உடலை மீட்டனர். அதைத்தொடர்ந்து ஆரல்வாய்மொழி போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.