மாவட்டம் முழுவதும் 1,436 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1,436 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஆசியா மரியம் கூறினார்.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை முற்றிலும் அகற்றுவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். இக்கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்ட சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி மேற்பார்வை ஆணையாளர் பொன்ராம் ராஜா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பேசும்போது கூறியதாவது :–
இயற்கை வளத்தை பாதிக்கின்ற சீமைக்கருவேல மரங்களை அகற்றிட வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகள், நகராட்சிப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகின்றது. மேலும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையில் துண்டுபிரசுரங்கள் வினியோகம், ஆட்டோக்கள் மூலம் விளம்பரங்கள், தண்டோரா என பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1,328.23 ஏக்கர் பரப்பளவிலும், ஊராட்சி பகுதிகளில் 1,409.11 ஏக்கர் பரப்பளவிலும், பொதுப்பணிப்பணித்துறை கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் 4,522.13 ஏக்கர் பரப்பளவிலும், இதர இடங்களில் 792.57 ஏக்கர் பரப்பளவிலும் என மொத்தம் ஊராட்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 8,052.04 ஏக்கர் பரப்பளவில் சீமைக்கருவேல மரங்கள் இருப்பது கண்டறியப்பட்டு அவற்றை அகற்றும் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 1,436 ஏக்கர் பரப்பளவில் இருந்த சீமைக்கருவேல மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு உள்ளன. மீதமுள்ள இடங்களிலுள்ள சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிலத்தடி நீர்
கூட்டம் முடிந்ததும் மேற்பார்வை ஆணையாளர் பொன்ராம் ராஜா நிருபர்களிடம் கூறியதாவது :–
பொதுமக்கள் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியில் முழு ஒத்துழைப்பு அளிப்பதோடு, தங்கள் பகுதிகளிலுள்ள சீமைக்கருவேல மரங்களை தாமாகவே முன்வந்து அழித்திட முன்வர வேண்டும். அவ்வாறு அழிப்பதன் மூலம் மழை அதிகஅளவு பெய்வதற்கு ஏற்ற சூழலும், நிலத்தடி நீர் பாதுகாப்பதற்கான சூழலும் ஏற்படும். எனவே பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், இளைஞர்கள் அனைவரும் அரசுத்துறை அலுவலர்களோடு ஒன்றிணைந்து சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்றிட முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து வேட்டாம்பாடி ஏரியில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரும் பணிகளை கலெக்டர் ஆசியா மரியம், மேற்பார்வை ஆணையாளர் பொன்ராம் ராஜா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிச்சாமி, மாவட்ட வன அலுவலர் காஞ்சனா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) சந்திரசேகரன், மகளிர் திட்டத்தின் திட்ட இயக்குனர் மணி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் லீலாகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.