அரியலூர் மாவட்டத்தில் 450 எக்டேரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம்
அரியலூர் மாவட்டத்தில் 450 எக்டேரில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளன என்று கலெக்டர் சரவணவேல்ராஜ் கூறினார்.
அரியலூர்,
சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது குறித்து மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்பேரில் நியமிக்கப்பட்டுள்ள வக்கீல்கள் சரவணகுமார், டேவிட் கணேசன் ஆகியோருடன் ஆய்வு கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது:-
450 எக்டேரில்...
அரியலூர் மாவட்டத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களில் இதுவரை சுமார் 450 எக்டேரில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு உள்ளன. இந்த பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் பொது மக்களின் பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்டத்தில் வருவாய் துறை, பொதுப் பணித்துறை (குடிநீர் மற்றும் ஆற்றுப்படுகை), ஊரக வளர்ச்சி துறை, நெடுஞ்சாலை துறை, இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை, கால்நடை பராமரிப்பு துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அரசு கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் பொதுமக்கள் பட்டா நிலங்களில் என 5,403 எக்டேரில் சீமைக் கருவேல மரங்கள் இருப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இதில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள 2,565 எக்டேரிலும், பொதுமக்கள் பட்டா இடங் களில் 2,838 எக்டேரிலும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற உத்தர விடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
பார்வையிட்டனர்
இதைத்தொடர்ந்து, அரியலூர் மாவட்டத்தில் அரசு கட்டுப்பாட்டில் உள்ள இடங் களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணியை ஐகோர்ட்டால் நியமிக்கப்பட்ட வக்கீல்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
அரியலூர் நகரில் நெடுஞ் சாலைகள், தவுத்தாய்குளம் உடையார் ஏரி, ஏலாக்குறிச்சி ஏரி, தூத்தூர் ஏரி ஆகிய இடங்களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு இருப்பதையும், மேலவரப்பங்குறிச்சி மற்றும் வைப்பூர் கொள்ளிடம் ஆற்றுப்படுகை, கரைவெட்டி பரதூரில் உள்ள பறவைகள் சரணாலயம் ஆகிய இடங் களில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வரு வதையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.