மூங்கில்பாடியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் ரூ.34½ லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

மூங்கில்பாடியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் ரூ.34½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கினார்.

Update: 2017-03-15 23:00 GMT

சின்னசேலம்

சின்னசேலம் அருகே உள்ள மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நில அளவைத்துறை உதவி இயக்குனர் சண்முகம், வேளாண்மை உதவி இயக்குனர் செல்வராஜ், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாசில்தார் கமலம் வரவேற்றார். முகாமில் ரூ.34 லட்சத்து 41 ஆயிரத்துக்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சுப்பிரமணியன் வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:–

மரக்கன்று

விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, அவரவர் வங்கி கணக்குகளில் நிவாரணத்தொகை செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. அரசு ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிட்டுள்ளதால், ரே‌ஷன் கார்டில் ஆதார் எண், செல்போன் எண்களை பதிவு செய்ய வேண்டும். மாவட்டத்தில் 40 ஆயிரம் புதிய ரே‌ஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் மட்டும் 90 பேருக்கு ரே‌ஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக பல்வேறு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர் சுப்பிரமணியன், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டார்.

இதில் தனி தாசில்தார்கள் வாசுதேவன், பாலசுப்பிரமணியன், மண்டல துணை தாசில்தார் கமலக்கண்ணன் உள்ளிட்ட வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்