ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 2–வது நாளாக வேலைநிறுத்தம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்.

Update: 2017-03-15 23:00 GMT

திண்டுக்கல்

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பேச்சுவார்த்தையில் ஒத்துக்கொள்ளப்பட்ட, ஊராட்சி செயலாளர்களுக்கான ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் நேற்று முன்தினம் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து 2–வது நாளாக நேற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால், மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் உள்ளிட்ட வளர்ச்சி பிரிவு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதற்கிடையே நேற்று ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர், சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 3–வது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) போராட்டம் தொடர்ந்து நடக்கிறது.

மேலும் செய்திகள்