புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தி தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டது. இந்த அலுவலகம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொத

Update: 2017-03-15 22:45 GMT

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டத்தில் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கடந்த ஆண்டு புதிதாக தொடங்கப்பட்டது. இந்த அலுவலகம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்ட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெத்தநாயக்கன்பாளையம் பஸ் நிலையம் பகுதியில் திரண்டனர். பின்னர் அவர்கள் கைகளில் கருப்புக்கொடியை ஏந்தியபடி தாலுகா அலுவலகம் இயங்கி வரும் ஒன்றிய அலுவலகம் வரை ஊர்வலமாக வந்தனர். அங்கு அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு, சாலையில் அமர்ந்து திடீரென போராட்டம் நடத்தினர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் புதிய கட்டிடம் கட்டப்படும் என்று அரசு அலுவலர்கள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து அதிகாரிகள் கூறும் போது, ‘பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா அலுவலக கட்டிடம் கட்ட புதிய இடம் தேர்வு தொடர்பாக ஆய்வு நடந்து வருகிறது. இதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆய்வு செய்யப்பட்டு புதிய கட்டிடம் விரைவில் கட்டப்படும்’ என்றார்கள்.

மேலும் செய்திகள்