மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்கு பூஜை
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஒடுக்குபூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
மணவாளக்குறிச்சி,
குமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவில் ‘பெண்களின் சபரிமலை‘ என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் மாசி திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜை, அம்மன் வெள்ளி பல்லக்கில் வீதிஉலா, சமய மாநாடு, யானை மீது களப பவனி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
10-ம் திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை மண்டைக்காடு சாஸ்தாகோவிலில் இருந்து யானை மீது களப பவனியும், அம்மன் வெள்ளி பல்லக்கில் பவனி வருதலும், குத்தியோட்டமும் நடந்தது. நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கூட்டம்- கூட்டமாக கோவிலுக்கு வரத்தொடங்கினர். மண்டைக்காடு கடற்கரை சாலை, சாஸ்தா கோவில் செல்லும் சாலை, லெட்சுமிபுரம் செல்லும் சாலை, மணலிவிளை செல்லும் சாலை ஆகிய இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
ஒடுக்கு பூஜை
மதியம் 1 மணிக்கு குமரி மாவட்டத்தில் 2016-ம் ஆண்டு பிளஸ்-2 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாலை 6 மணிக்கு சமய மாநாடும், 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடந்தது. இரவு 12 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடங்கியது. மண்டைக்காடு தேவசம் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள சாஸ்தா கோவிலில் இருந்து 21 வகையான உணவு பதார்த்தங்கள், 9 பானைகள் மற்றும் பெட்டிகளில் வைக்கப்பட்டு பூசாரிகளால் கோவிலுக்கு பவனியாக கொண்டு வரப்பட்டது. 2 குடம் தேனும் பவனியில் எடுத்து செல்லப்பட்டது.
உணவு பதார்த்தங்களை பவனியாக தலையில் சுமந்து வரும் பூசாரிகளின் வாய்ப்பகுதி சிவப்பு துணியால் கட்டப்பட்டு இருந்தது. பானைகள் மற்றும் பெட்டிகளில் இருந்த உணவு பதார்த்தங்கள் நீளமான வெள்ளை துணியால் மூடப்பட்டு இருந்தது. இந்த ஒடுக்கு பவனி கோவிலை ஒரு முறை வலம் வந்ததும் உணவு பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக அம்மன் முன் இறக்கி வைக்கப்பட்டது.
பின்னர் கும்பளங்காய், மஞ்சள் நீர், சுண்ணாம்பு, பூ ஆகிய பொருட்களால் குருதி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பிறகு நடைதிறக்கப்பட்டு ஒடுக்கு பூஜையும், தீபாராதனையும் நடைபெற்றது.
ஒடுக்கு பவனியின் போதும், பூஜை நடக்கும் போதும் கோவில் வளாகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகள் எந்தவித ஓசையும் இன்றி பூரண அமைதியாக இருந்தது.
திரளான....
இந்த பூஜையில் குமரி மாவட்ட பக்தர்கள், கேரள பக்தர்கள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
ஒடுக்கு பூஜையையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
திருவிழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.