அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் கல்வித்துறை முன்பு வாயிற்கூட்டம்

புதுவை அண்ணா நகரில் உள்ள கல்வித்துறை அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் வேலைநிறுத்த விளக்க வாயிற்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து, அரசு சார்பு பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்க

Update: 2017-03-03 22:30 GMT

புதுச்சேரி,

புதுவை அண்ணா நகரில் உள்ள கல்வித்துறை அலுவலகம் முன்பு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் வேலைநிறுத்த விளக்க வாயிற்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அனைத்து நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து, அரசு சார்பு பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி என அனைத்து ஊழியர்களுக்கும் 7–வது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும், 7–வது ஊதியக்குழு பரிந்துரைகள் படி வழங்கப்பட வேண்டிய ஊதிய நிலுவையை உடனே வழங்க வேண்டும் உள்பட கோரிக்கையை வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்திற்கு சம்மேளனத்தின் தலைவர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் பாலமோகனன், பிரேமதாசன், கிறிஸ்டோபர், புகழேந்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வருகிற 7–ந் தேதி செஞ்சி சாலையில் உள்ள இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பும், 10–ந் தேதி திருவள்ளுவர் நகர் கணக்கு மற்றும் கருவூல இயக்குனர் அலுவலகம் முன்பும் வேலைநிறுத்த விளக்க வாயிற்கூட்டம் நடைபெறவுள்ளதாக அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்