பி.யூ.சி. பொதுத் தேர்வை எந்த குழப்பமும் இன்றி நடத்த நடவடிக்கை மந்திரி தன்வீர்சேட் பேட்டி

கர்நாடகத்தில் பி.யூ.சி. பொதுத் தேர்வை எந்த குழப்பமும் இன்றி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி தன்வீர்சேட் கூறினார். கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– மு

Update: 2017-03-03 21:00 GMT

பெங்களூரு,

கர்நாடகத்தில் பி.யூ.சி. பொதுத் தேர்வை எந்த குழப்பமும் இன்றி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மந்திரி தன்வீர்சேட் கூறினார்.

கர்நாடக பள்ளி கல்வித்துறை மந்திரி தன்வீர்சேட் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

கர்நாடகத்தில் பி.யூசி. பொதுத் தேர்வை எந்த குழப்பமும் இன்றி நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக அதிகளவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. விடைத்தாள்களில் ரகசிய எண் குறிக்கப்படும் இடத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

கடந்த ஆண்டு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாகி குழப்பத்தை ஏற்படுத்தியது. அதனால் இந்த ஆண்டு அத்தகைய சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வினாத்தாள்கள் அனுப்பும் பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். இந்த ஆண்டு எக்காரணம் கொண்டும் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகாது. தேர்வு நேரங்களில் வெளியாகும் வதந்திகளை மாணவர்கள் நம்பக்கூடாது.

ஒப்புதல் கிடைக்கவில்லை

விடைத்தாள் திருத்தும்போது ஆசிரியர்கள் போராட்டம் நடத்துவதை தடுக்க ஒரு சட்ட திருத்தத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு சட்டசபையில் இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. வரும் கூட்டத்தொடரில் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படும். விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணித்தால் அத்தகைய ஆசிரியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு மந்திரி தன்வீர்சேட் கூறினார்.

மேலும் செய்திகள்