மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; 2 பேர் படுகாயம் டிரைவர் கைது;

Update: 2017-03-03 19:55 GMT

குளித்தலை,

குளித்தலை அருகே உள்ள புதுப்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). வை.புதூரை சேர்ந்தவர் மதனகோபால் (32). இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் குளித்தலையில் இருந்து புதுப்பாளையத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர். குளித்தலை அருகே உள்ள கோட்டமேடு என்ற இடத்தில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுரேசும், மதனகோபாலும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் வேளாங்கண்ணி அருகே மார்த்தாண்டம் காமராஜர் நகரை சேர்ந்த விஜி(39) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்