பொள்ளாச்சியில் கேரள சுற்றுலா வேன் மோதி போலீஸ்காரர் சாவு

பொள்ளாச்சியில் மோட்டார் சைக்கிள் மீது கேரள சுற்றுலா வேன் மோதி போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2017-03-03 22:45 GMT
தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் வைகுந்தராமன் (வயது 28). இவர் பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி (25). இவர்களுக்கு மது ஸ்ரீ (4) என்ற மகளும், தர்ஜித் (2) என்ற மகனும் உள்ளனர்.

வைகுந்தராமன் வடுகபாளையத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கி இருந்து பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வைகுந்தராமன் மோட்டார் சைக்கிளில் ராஜாமில் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தார்.

சாவு

அதே சமயத்தில் பொள்ளாச்சி வழியாக கேரளா மாநிலம் கோழிக்கோட்டிற்கு சுற்றுலா வேன் ஒன்று சென்று கொண்டிருந்து. சப்–கோர்ட்டு அருகில் வந்த போது, கேரள சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டத்தில் வைகுந்தராமன் படுகாயமடைந்தார்.

உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கோழிக்கோட்டை சேர்ந்த வேன் டிரைவர் ஜிரீத் (38) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்