நெய்வேலியில் ஓட்டல் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை குடும்ப தகராறில் விபரீத முடிவு
நெய்வேலியில் குடும்ப தகராறில் ஓட்டல் உரிமையாளர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நெய்வேலி,
ஓட்டல் உரிமையாளர்நெய்வேலி வட்டம்–4 சி.ஆர். குடியிருப்பை சேர்ந்தவர் பாலேந்திரன் (வயது 52). இவரது மனைவி சரஸ்வதி(49). பாலேந்திரன் அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இவர் தினமும் மதுகுடித்து விட்டு வந்து தனது மனைவியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று பாலேந்திரன் மதுகுடித்துவிட்டு வீட்டுக்கு வந்து சரஸ்வதியிடம் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவரை சரஸ்வதி தட்டிக் கேட்டார். இதில் மனவேதனையடைந்த பாலேந்திரன் வீட்டில் இருந்த மண்எண்ணெயை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதும் பாலேந்திரன் வலியால் அலறி துடித்தார்.
சாவுஇந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் பாலேந்திரனை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பாலேந்திரன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சரஸ்வதி நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.