மும்பை மேயர் தேர்தல் சிவசேனா, பா.ஜனதாவுக்கு ஆதரவு இல்லை தேசியவாத காங்கிரஸ் திட்டவட்டம்

சிவசேனா, பாரதீய ஜனதாவுடன் எங்களுக்கு எந்தவொரு புரிதலோ அல்லது நட்பு ரீதியான சண்டையோ கிடையாது.

Update: 2017-03-02 22:21 GMT

மும்பை,

மாநில தேசியவாத காங்கிரஸ் தலைவர் சுனில் தத்காரே நேற்று மும்பையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சிவசேனா, பாரதீய ஜனதாவுடன் எங்களுக்கு எந்தவொரு புரிதலோ அல்லது நட்பு ரீதியான சண்டையோ கிடையாது. மும்பை மேயர் தேர்தலில் சிவசேனா, பா.ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டோம். காவி கட்சிகள் அதிகாரத்துக்காக கூட்டு சேர இருப்பது போல் தெரிகிறது. மாநில அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற சிவசேனாவுக்கு தைரியம் கிடையாது.

பா.ஜனதா தலைமையிலான மாநில அரசுக்கு சிவசேனா விதித்த நோட்டீசு காலம் எங்கே போனது என்பதும், சிவசேனா மந்திரிகள் தங்களது பாக்கெட்டுகளில் தயாராக வைத்திருந்த ராஜினாமா கடிதம் இன்னமும் இருக்கிறதா? அல்லது கிழிந்துவிட்டதா? என்பதும் அவர்களுக்கு மட்டுமே தெரியும்.

‘சாம்னா’ மூலம் விமர்சிப்பதால் என்ன பயன் வந்துவிட போகிறது. விமர்சனத்துக்கு இணங்க சிவசேனா நடந்து கொள்ளட்டும். அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறட்டும்.

இவ்வாறு சுனில் தத்காரே தெரிவித்தார்.

மேலும் செய்திகள்