திருவாரூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 680 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர்
திருவாரூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 680 பேர் பிளஸ்-2 தேர்வு எழுதினர். திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வதி பார்வையிட்டார்.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 110 பள்ளிகளை சேர்ந்த 6 ஆயிரத்து 126 மாணவர்கள், 8 ஆயிரத்து 554 மாணவிகள் ஆக மொத்தம் 14 ஆயிரத்து 680 மாணவர்கள் தேர்வு எழுதினர். திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த தேர்வினை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பார்வதி நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு 42 மையங் களில் நடக்கிறது. இதில் 67 அரசு பள்ளிகளை சேர்ந்த 7,806 பேர், 3 ஆதிதிராவிட பள்ளிகளை சேர்ந்த 295 பேர், 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த 5,043 பேர், 24 மெட்ரிக் பள்ளிகளை சேர்ந்த 1,536 பேர் என மொத்தம் 14 ஆயிரத்து 680 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் தமிழ் வழியில் 12,068 மாணவர்கள், ஆங்கில வழியில் 2612 மாணவர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களில் தேவையான குடிநீர், கழிவறை, தடையின்றி மின்சார வசதியும் செய்யப்பட்டது. தேர்வு மையங்களை கண்காணிக்க 7 பறக்கும் படைகள், 840 அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு ஆகியவை அமைக்கப்பட்டு சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டனர். காப்பி அடித்தல் போன்ற ஒழுங்கீன செயல்களை தடுத்திட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.