திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் மணவாளநகர் போலீசார் நேற்று முன்தினம் மணவாளநகர் பகுதி அருகே உள்ள கூவம் ஆற்றுப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. டிராக்டரை ஓட்டி வந்த பெரியக்குப்பம் இருளர்காலனியை சேர்ந்த துரைய்யா(வயது 33) என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய டிராக்டர் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதே போல செவ்வாப்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் செவ்வாப்பேட்டை பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை நிறுத்தினார்கள். போலீசாரை கண்டதும் டிரைவர் லாரியை அங்கேயே விட்டு விட்டு தப்பிச்சென்று விட்டார். போலீசார் அந்த லாரியை கைப்பற்றி தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர்.