அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு தொடங்கியது 8,370 மாணவ-மாணவிகள் எழுதினர்
அரியலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 8,370 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரியலூர் மற்றும் உடையார்பாளையம் என 2 கல்வி மாவட்டங்களிலும் 26 மையங்களில் நேற்று பிளஸ்-2 தேர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. சரியாக காலை 10.15 மணிக்கு தேர்வு தொடங்கியதும் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் தேர்வு எழுதினர்.
அரியலூர் மாவட்டத்தில் 3,670 மாணவர்கள், 4,775 மாணவிகள் என மொத்தம் 8,445 பேர் பிளஸ்-2 தேர்வு எழுத தகுதி பெற்றிருந்தனர். இதில் 3,632 மாணவர்கள், 4,738 மாணவிகள் என மொத்தம் 8,370 பேர் தேர்வு எழுதினர். 75 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை.
கல்வி அதிகாரிகள் ஆய்வு
அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட தேர்வு மையங்களை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மாரிமுத்து மற்றும் கல்வி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு போதுமான வசதிகள் உள்ளனவா? என்பது குறித்து கேட்டறிந்தனர்.
மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அப்போது மாற்றுத்திறனாளி மாணவர்கள் விடையை சொல்ல, சொல்ல அதை ஆசிரியர்கள் விடைத்தாளில் எழுதினர்.
70 பறக்கும் படையினர்
தேர்வு மையங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர் மற்றும் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்களாக 29 தலைமை ஆசிரியர்களும், துறை அலுவலர் மற்றும் கூடுதல் துறை அலுவலர்களாக 29 ஆசிரியர்களும், வினாத்தாள்களை பாதுகாப்பாக எடுத்து செல்ல 9 வழித்தட அலுவலர்களும், அறை கண்காணிப்பாளர்களாக 480 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் தேர்வு பணிக்காக நியமிக்கப்பட்ட 70 பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் சுற்றி சுற்றி வந்து ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அடிப்படை வசதிகள்
காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வானது மதியம் 1.15 மணிக்கு நிறைவடைந்தது. அதன் பின்னர் மாணவர்கள் விடைத்தாளை அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்து விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து தங்களது வகுப்பு ஆசிரியர்களை சந்தித்து சந்தேக வினாக்களுக்குரிய விடைகள் பற்றி கேட்டு தெரிந்து தெளிவுப்படுத்தி கொண்டனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக 1 மணி நேரம் ஒதுக்கப்பட்டது. தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் வழிகாட்டுதலின்படி செய்யப்பட்டு இருந்தது. இன்று (வெள்ளிக்கிழமை) தமிழ் 2-ம் தாள் தேர்வு நடைபெற உள்ளது.