பாடாலூர்,
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியம் காரையில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆலத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் கர்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார். கிளை கழக செயலாளர் கலையரசன் வரவேற்றார். கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தலைமை பேச்சாளர் ஜமால் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சாதனைகளை விளக்கி பேசினர். இதில் மாவட்ட, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அண்ணா நகர் அ.தி.மு.க. கிளை செயலாளர் ராஜாங்கம் நன்றி கூறினார்.