வேப்பந்தட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியல்

வேப்பந்தட்டை அருகே பொதுமக்கள் சாலை மறியல்

Update: 2017-03-02 21:22 GMT
வேப்பந்தட்டை,

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அனுக்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு அனுக்கூர் கிராமத்தை சேர்ந்த பயனாளிகளை 2 பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரிவு பயனாளிகளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று வேலை வழங்கப்படாமல் இருந்த பயனாளிகள் தினமும் அனைத்து பயனாளிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்று கூறி அனுக்கூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் திடீரென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கவிதா மற்றும் மங்களமேடு போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனைவருக்கும் ஒரே நேரத்தில் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்