குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல்

குடிநீர் வசதி கோரி காலிக்குடங்களுடன் சாலை மறியல்;

Update: 2017-03-02 22:45 GMT
திருச்சி,

திருச்சி பாலக்கரை கூனிபஜாரில் கடந்த சில நாட்களாக குழாய்களில் சரியாக குடிநீர் வரவில்லை. மேலும் மாநகராட்சி லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். இந்த நிலையில் குடிநீர் வசதி கேட்டு நேற்று இரவு காலி குடங்களுடன் அப்பகுதி பொதுமக்கள் கூனிபஜாரில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த பாலக்கரை போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். அதன்பின் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) சீராக குடிநீர் வினியோகிக்கப்படாவிட்டால் மீண்டும் மறியல் போராட்டம் நடத்தப்படும் என பொதுமக்கள் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்