பொருட்களை கண்டுபிடிக்கும் கருவி

சின்னச் சின்ன பொருட்களை வைத்த இடம் தெரியாமல் தேடுவது பலருக்கும் வாடிக்கை.

Update: 2017-03-02 14:15 GMT
சாவிக்கொத்து, ஐ.டி. கார்டுகள், ஏ.டி.எம். கார்டு, சீப்பு என நாம் தினம் தினம் தேடும் பொருட்களின் பட்டியலை அடுக்கிக் கொண்டே போகலாம். பொருட்கள் இடம் மாறி எங்கோ மறைந்திருந்தாலும் அவற்றை கண்டுபிடிக்க ஒரு எளிய வழியும், கருவியும் வந்துவிட்டது.

இப்படி பொருட்களை ஒருங்கிணைக்கும் முறை பொருட்களின் இணையம் (இன்டர்நெட் ஆப் திங்ஸ்) எனப்படுகிறது. இதை எளிமையாக செயல்படுத்தும் வகையில் சிறிய பேட்ஜ்களை அறிமுகம் செய்துள்ளது ‘பிக்சிஸ்’ நிறுவனம். இவை சிறிய புளூடூத் கருவிகளாகும். எந்த பொருளின் மீதும் இணைத்து அல்லது பொருத்தி வைத்துவிடலாம். பின்னர் இதற்கான சிறப்பு அப்ளிகேசன் மூலம் அந்தப் பொருள் எங்கே ஒளிந்து மறைந்திருந்தாலும் கண்டுபிடிக்கலாம்.

60 அடி தூரத்திற்கு இந்த பட்டை வேலை செய்யும். எனவே எதுவும் தொலைந்துபோகாது. தற்போது ஆப்பிள் போன்களில் செயல்படும் வகையில் இந்த பிக்சி பேட்ஜ்கள் அறிமுகமாகி உள்ளன. விலை 99 அமெரிக்க டாலர்.

மேலும் செய்திகள்