மளிகைக்கடை உரிமையாளரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த 3 வாலிபர்கள் கைது
2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ஆறுமுகசாமியை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (வயது 59). இவர் நெல்லிக்குப்பம் சாலையில் மளிகை கடை நடத்தி வருகிறார். சில நாட்களுக்கு முன்பு கடையில் வசூலான ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்தை பையில் வைத்து சைக்கிளில் மாட்டிக் கொண்டு ஆறுமுகசாமி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது வழியில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் ஆறுமுகசாமியை வழிமறித்து கத்தியைக்காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் கிளாம்பாக்கம் அருகே நேற்று சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை கூடுவாஞ்சேரி போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது மளிகைக்கடை உரிமையாளரிடம் பணம் பறித்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் கிளாம்பாக்கம் பகுதியை சேர்ந்த சசிக்குமார் (20), வீரா (19), முத்துமாரி (20) என தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தேடிவருகின்றனர்.