ஆப்பூர் ஊராட்சியில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா

ஆப்பூர் ஊராட்சியில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2017-03-01 21:38 GMT
செங்கல்பட்டு,

ஆப்பூர் ஊராட்சியில் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

பிறந்த நாள் விழா

தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் 65-வது பிறந்த நாள் விழா செங்கல்பட்டை அடுத்த ஆப்பூர் ஊராட்சியில் கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன் 65 அடி உயர கட்சி கொடி கம்பம் ஏற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் தொழிலதிபர் மதுசூதனன், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் சந்தானம், குன்றத்தூர் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சிலம்புசெல்வன், முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ரவிச்சந்திரன், கமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையடுத்து பரனூர் அரசு தொழுநோயாளிகள் இல்லத்தில் நடந்த விழாவில் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட செயலாளரும் ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தா.மோ.அன்பரசன், வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., ஒன்றிய செயலாளர் எம்.கே.தண்டபாணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டு சேலை மற்றும் உணவு பொட்டலங்களை வழங்கினார்கள்.

குழந்தைகளுக்கு மோதிரம்

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் நேற்று பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் மோதிரம் அணிவித்து பரிசு பொருட்களை வழங்கினார்கள். இதில் நகரசெயலாளர் நரேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வல்லம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தி.மு.க.பிரமுகர் வில்சன் என்ற கலையரசன் வீட்டுக்கு சென்ற வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ., வறுமையில் வாடும் கலையரசனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி தனது சொந்த பணம் ரூ.3 லட்சத்தை தா.மோஅன்பரசன் எம்.எல்.ஏ. கையால் வில்சனின் மனைவியிடம் வழங்கினார்.

சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில் ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ் தலைமையில் 12 வார்டுகளிலும் கட்சி கொடியேற்றி அன்னதானம் வழங்கப்பட்டது.

ஒன்றிய துணைசெயலாளர் சி.எம். கதிரவன், ஊராட்சி தி.மு.க.செயலாளர் கே.பி. ராஜன், கே.ஆர்.சி.ஜெ.ரத்திஷ்,ஆகியோர் தலைமையில் பஜார் வீதியில் 65 கிலோ கேக் வெட்டியும், 1,000 பேருக்கு பிரியாணியும் வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய மகளிர் அணியை சேர்ந்த கலைவாணி, கே.ஆர்.சி.ஜெ. சதீஷ், மகளிர் அணி அமைப்பாளர் சாந்தி, சரத், பாரேரி. ஆறு முகம், பாரேரி எத்திராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஒரகடம், சென்னக்குப்பம் பகுதிகளில் குன்றத்தூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் சிலம்புசெல்வன் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டன. இதில் பரிமளா சிட்டிபாபு, ஜெகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்