சேலம் மாநகரில் விபத்து வழக்கு ஆவணங்களை ஆன்லைனில் பெறும் வசதி
சேலம் மாநகரில் வாகன விபத்து வழக்கு சம்பந்தமான ஆவணங்களை ஆன்லைனில் பெறும் வசதியை போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தொடங்கி வைத்தார்.;
சேலம்,
வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நிவாரணம் பெறும் வகையில், வழக்கிற்கு தேவையான ஆவணங்களை காவல்துறை ஆன்லைனில் வழங்கிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவில், விபத்து வழக்கின் முதல் தகவல் அறிக்கை, வாகனத்தின் பதிவு சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், காப்புரிமை சான்றிதழ், வணிக தகுதி சான்றிதழ் மற்றும் உரிமம், மாதிரி வரைபடம், மோட்டார் வாகன தணிக்கை சான்றிதழ், பிரேத பரிசோதனை சான்றிதழ், விபத்து நகல், காய சான்றிதழ், இறுதி அறிக்கை உள்ளிட்ட விபத்து சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் ஆன்லைன் (சி.சி.டி.என்.எஸ்.) மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியிருந்தது.
இதன்படி விபத்து ஆவணங்களை ஆன்லைனில் பெறும் வசதி நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் தொடங்கப்பட்டது. அந்த வகையில் சேலம் மாநகர காவல்துறை சார்பில் விபத்து சம்பந்தமான ஆவணங்களை ஆன்லைனில் பெறும் வசதியை சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் நேற்று போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் தொடங்கி வைத்தார். இதில் மாநகர துணை கமிஷனர் ராமகிருஷ்ணன், உதவி கமிஷனர்கள் விஜய்கார்த்திக் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் கமிஷனர் பேட்டி
விபத்து ஆவணங்களை ஆன்லைனில் பெறும் வசதி குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:–
இந்த வசதியின் மூலம் விபத்தில் பாதிக்கப்படுபவர்கள், ஆவணங்களை விரைவாக பெற்று உரிய இழப்பீட்டை எளிதாக வாங்க முடியும். போலீஸ் நிலையங்களுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. ஆவணங்களை ஆன்லைன் மூலமாகவே பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாநகரில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விபத்து தொடர்பாக 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 39 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாகவே உயிரிழந்துள்ளனர்.
எனவே, வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும். சேலத்தில் ஆங்காங்கே நடைபெறும் திருட்டு சம்பவங்களை தடுக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். போக்குவரத்து புலனாய்வு பிரிவுக்கு இன்ஸ்பெக்டர் நியமிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி அதன்பிறகு முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் சூப்பிரண்டு ராஜன்
அதையொட்டி ஆட்டையாம்பட்டி போலீஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் இந்த புதிய திட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, காலதாமதம், வீண் அலைச்சலை தவிர்த்து மக்கள் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் போலீசுடன் ஒத்துழைப்பு நல்கி விழிப்புணர்வு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.