சென்னை விமான நிலையத்தில் பயணிகள்-அதிகாரிகள் இடையே புன்னகை வார விழா

சென்னை விமான நிலையத்தில் 7-ந்தேதி வரை பயணிகள்-அதிகாரிகள் இடையே புன்னகை வார விழா நடைபெறுகிறது.

Update: 2017-03-01 20:57 GMT
ஆலந்தூர்,

சென்னை விமான நிலையத்தில் 7-ந்தேதி வரை பயணிகள்-அதிகாரிகள் இடையே புன்னகை வார விழா நடைபெறுகிறது.

புன்னகை வார விழா

சென்னை விமான நிலையத்தில் பயணிகள்-அதிகாரிகள் இடையே 7-ந்தேதி வரை “புன்னகை வார விழா” கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடக்க விழா நேற்று உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் நடந்தது. இதில் சென்னை விமான நிலையம் வந்த பயணிகளை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி, இன்முகத்துடன் ரோஜா பூ கொடுத்து வரவேற்றார்.

நிகழ்ச்சியில் இந்திய விமான பயணிகள் நல சங்க நிர்வாகி சுதாகர் ரெட்டி, சுங்கத்துறை கூடுதல் இயக்குனர் தேஜூ, குடியுரிமை அதிகாரி சந்திரன், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி சஞ்சய் சர்மா, மத்திய தொழிற்பாதுகாப்பு படை முதன்மை அதிகாரி ஆனந்த் சக்சேனா, தென்மண்டல விமான நிலைய ஆணையக முதன்மை அதிகாரி ராஜூ மற்றும் விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள், மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் விமான நிலைய போலீசார் கலந்து கொண்டனர்.

முதல் முறையாக...

இதுபற்றி சென்னை விமான நிலைய இயக்குனர் சந்திரமவுலி, நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை விமான நிலையத்துக்கு வரக்கூடிய விமான பயணிகளை விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அனைவரும் இன்முகத்தோடு வரவேற்கும் வகையில் முதல் முறையாக இந்த புன்னகை வார விழா நிகழ்ச்சி ஒரு வாரத்துக்கு கொண்டாடப்பட உள்ளது.

விமான நிலைய ஊழியர்களுக்கு பணியின் போது ஏற்படும் மன அழுத்தத்தை குறைக் கும் வகையிலும், பயணிகளோடு நல்லுறவு ஏற்படும் வகையிலும் இந்த விழா நடத்தப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்