‘‘பிளஸ்–2 தேர்வை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும்‘‘ மாணவர்களுக்கு முதன்மை கல்வி அதிகாரி அறிவுரை
சேலம் மாவட்டத்தில் இன்று தொடங்கும் பிளஸ்–2 தேர்வை மாணவ–மாணவிகள் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்துள்ளார்.
சேலம்,
சேலம் மாவட்டத்தில் 102 மையங்களில் இன்று (வியாழக்கிழமை) முதல் பிளஸ்–2 தேர்வு தொடங்குகிறது. அரசு பள்ளிகள், நிதியுதவி, சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 299 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 272 மாணவர்கள், 21 ஆயிரத்து 225 மாணவிகள் என 41 ஆயிரத்து 497 பேர் பிளஸ்–2 தேர்வு எழுதுகின்றனர். மேலும், தனித் தேர்வர்களாக 1,200 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுப் பணிக்காக 107 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 109 துறை அலுவலர்களும், தேர்வறை கண்காணிப்பாளர்களாக 2,200 ஆசிரியர்களும், 400 அலுவலக பணியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவிகளின் பதிவு எண் விவரத்தை மேஜையில் ஒட்டும் பணிகளில் ஆசிரியர்கள் நேற்று ஈடுபட்டனர். இதேபோல் பிளஸ்–2 தேர்வு நடைபெறும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ–மாணவிகளின் பதிவு எண்ணை மேஜைகளில் ஒட்டப்பட்டன. மேலும், தடையில்லா மின்சாரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி அதிகாரி அறிவுரை
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில், பிளஸ்–2 தேர்வை மாணவ–மாணவிகள் மிக தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். எவ்வித பதற்றம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும். அனைத்து கேள்விளுக்கும் பதில் எழுத வேண்டும். தேர்வு நேரங்களில் குறைந்த பட்சம் 6 மணி நேரம் தூங்க வேண்டும். இரவு முழுவதும் கண் விழித்து படிக்க கூடாது. அவ்வாறு விழித்தால் தேர்வு மையத்தில் வைத்து சோர்வு ஏற்படும். பிளஸ்–2 தேர்வில் எடுக்கும் மதிப்பெண் தான் மாணவ–மாணவிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். சேலம் மாவட்டத்தில் பிளஸ்–2 தேர்வு எழுதும் மாணவ–மாணவிகள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன், என்றார்.