கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 11,833 பேர் எழுதுகிறார்கள்

கரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வை 11,833 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். மேலும் வினாத்தாள்கள் வைக்கப்பட்ட பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.;

Update: 2017-03-01 22:45 GMT
கரூர்,

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கரூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 104 பள்ளிகளில் இருந்து 5,482 மாணவர்களும், 5,990 மாணவிகளையும் சேர்த்து 11,472 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

அதே போன்று தனித்தேர்வர்களாக 164 மாணவர்களும், 197 மாணவிகளும் என மாவட்டம் முழுவதும் 11 ஆயிரத்து 833 பேர் எழுதுகிறார் கள். இதில் பார்வையற்றவர்கள் உள்பட மாற்றுத்திறனாளிகள் 21 பேர் அடங்குவர்.

பறக்கும் படை

இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 34 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வை கண்காணிக்க 34 முதன்மை கண்காணிப்பு அலுவலர்கள், 9 கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள், 34 துறை அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதே போன்று 80 பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. 660 அறை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

பிளஸ்-2 தேர்வுக்கான வினாத்தாள்கள் கரூர் நகராட்சி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு உள்ளது. இன்று (வியாழக்கிழமை) காலை அந்தந்த தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. 

மேலும் செய்திகள்