பெரும்புகளூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
பெரும்புகளூரில் கோமாரி நோய் தடுப்பூசி முகாமை கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார்.
திருவாரூர்,
கோமாரி நோய் தடுப்பூசி முகாம்
கொரடாச்சேரி ஒன்றியம் பெரும்புகளூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகள் வளர்த்து வரும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்கு ஏற்படும் கால் மற்றும் வாய் நோயை கட்டுப்படுத்தும் பொருட்டு 1 லட்சத்து 98 ஆயிரத்து 700 கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடும் முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
மாவட்டம் முழுவதும் 39 கால்நடை மருத்துவ குழுக்கள் கோமாரி நோய் தடுப்பூசி முகாமில் ஈடுபட உள்ளனர். இதற்காக 2 லட்சம் தடுப்பூசி மருந்தினை தமிழக அரசு வழங்கியுள்ளது. கால்நடை மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடும் பொருட்டு அந்தந்த கிராமங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தடுப்பூசி போடும் முகாம் மேற்கொள்வார்கள். எனவே கால்நடை வளர்ப்போர், தங்கள் கிராமத்திற்கு தடுப்பூசி குழுவினர் வரும்பொழுது தங்களிடமுள்ள கன்றுகளுக்கும், சினைப்பசுக்கள், கறவைப்பசுக்கள், எருமைகள் மற்றும் எருதுகளுக்கும் தவறாமல் தடுப்பூசியினை போட்டு கொண்டு பயன்பெற வேண்டும்்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் ரவீந்திரன், துணை இயக்குனர் முகமது உதுமான், உதவி இயக்குனர் ஈஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.