வெளிமாநில மதுபாட்டில்கள், சாராயம் கடத்தல் பெண் உள்பட 2 பேர் கைது

திட்டச்சேரி அருகே வெளிமாநில மதுபாட்டில்கள், சாராயம் கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-03-01 22:45 GMT
திட்டச்சேரி,

நாகை மாவட்டம் திட்டச்சேரி போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதிகளில் வெளிமாநில சாராயம் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தப்படுவதாக திட்டச்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் திட்டச்சேரிக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திட்டச்சேரி அருகே கோதண்டராஜபுரம் மெயின்ரோட்டில் நேற்று திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா ஆத்மநாபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தமிழரசன், வீரபாண்டியன், கனகராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் பகுதியில் இருந்து வேகமாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் அட்டை பெட்டிகளில் 600 வெளிமாநில மதுபாட்டில்களும், 110 லிட்டர் சாராயமும் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் நாகை காடம்பாடி மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த செந்தில் (வயது37), நாகை மருந்துகொத்தரோடு பகுதியை சேர்ந்த பிரேமா (57) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து, மதுபாட்டில்கள், சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்