தஞ்சையில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் இந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம்;
தஞ்சாவூர்,
கேரள கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைத்து இந்து அமைப்புகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தஞ்சை ரெயில் நிலையத்தில் இந்து அமைப்புகள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்த அப்பாசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் சேகர், மாவட்ட தலைவர்கள் இளங்கோ, ராஜா, பொதுச்செயலாளர் கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சியினரை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாவட்ட பொதுச்செயலாளர்கள் பிரகாஷ், உமாபதி, நகர தலைவர் விநாயகம், ஒன்றிய தலைவர் வக்கீல் ராஜேஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் சுதந்திராதேவி, விசுவ இந்து பரிஷத் சரவணன், தர்ம ரக்ஷான் சமிதி ஆனந்த், சேவா பாரதி அமைப்பை சேர்ந்த கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட செயலாளர் ஜெய்சதீஷ் நன்றி கூறினார்.