தமிழகம் முழுவதிலும் இருந்து புழல் சிறையில் 98 கைதிகள் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்

சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.

Update: 2017-03-01 20:49 GMT
செங்குன்றம்,

தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) பிளஸ்-2 பொதுத் தேர்வு தொடங்குகிறது. சென்னை புழல் சிறையை தேர்வு மையமாக கொண்டு தமிழகம் முழுவதும் உள்ள சிறை கைதிகள் 98 பேர் இன்று பிளஸ்-2 தேர்வு எழுதுகிறார்கள்.

அதன்படி புழல் சிறையில் தண்டனையை கைதிகள் 20 பேரும், விசாரணை கைதிகள் 4 பேரும், திருச்சியில் இருந்து 15 பேரும், கோவையில் இருந்து 13 பேரும், மதுரையில் இருந்து 11 பேரும், வேலூரில் இருந்து 8 பேரும், சேலத்தில் இருந்து 9 பேரும், பாளையங்கோட்டையில் இருந்து 10 பேரும், கடலூரில் இருந்து 3 பேரும், புதுக்கோட்டையில் இருந்து 5 பேரும் என மொத்தம் 98 சிறை கைதிகள் தேர்வு எழுதுகின்றனர்.

தேர்வு ஏற்பாடுகளை புழல் சிறை துறை அதிகாரிகள் செய்து உள்ளனர். 

மேலும் செய்திகள்