ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

Update: 2017-03-01 22:00 GMT

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் தமிழகத்தின் பல இடங்களில் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்தநிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை உடனடியாக கைவிடக் கோரி மதுரை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு கல்லூரி மாணவர்களும், புரட்சிகர மாணவர் இயக்கத்தினரும் போராட்டம் நடத்துவதற்காக நேற்று மாவட்ட நீதிமன்றம் முன்பு குவிந்தனர். பின்னர் அவர்கள் ஊர்வலமாக சென்று சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், 30 மாணவர்களை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்