இரும்பு மேம்பால திட்டத்தில் ஊழலா? எடியூரப்பா ஆதாரங்களை வெளியிட வேண்டும் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேட்டி
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு வந்த பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–
பெங்களூரு,
பெங்களூருவில் நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு வந்த பெங்களூரு நகர வளர்ச்சித்துறை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:–
இரும்பு மேம்பால திட்டத்தில் ஊழல் நடந்து இருப்பதாக எடியூரப்பா சொல்கிறார். இதற்கு அவர் ஆதாரங்களை வெளியிட வேண்டும். ஆதாரங்கள் இல்லாமல் குற்றம்சாட்டுவது சரியல்ல. எடியூரப்பா, மத்திய மந்திரி அனந்தகுமார் ஆகிய 2 பேரும் பேசிய உரையாடல் அடங்கிய சி.டி. வெளியானது. அதில் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது மக்களுக்கு தெரியும். பா.ஜனதாவின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது.
பெங்களுரு மாநகராட்சியில் ஊழல் நடந்திருப்பதாக எடியூரப்பா சொல்கிறார். அதற்கும் அவர் ஆதாரங்களை வெளியிடட்டும். அவர் வெளியிடும் ஆதாரங்களில் உண்மை இருந்தால் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.