பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகளில் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர்.
பெரம்பலூர்,
கோரிக்கைகள்
நாட்டிலுள்ள வங்கிகளில் தற்போது பல்வேறு விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய ரூ.500, ரூ.2,000 நோட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பணம் எடுப்பது உள்ளிட்ட பண பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக தினமும் மக்கள் கூட்டம், கூட்டமாக வங்கிக்கு சென்று வருகின்றனர். இதனால் வங்கி ஊழியர்கள் பணி நேரத்தை கடந்து, சில மணி நேரம் வேலை செய்து வருகின்றனர்.
இவ்வாறாக செய்யும் பணிக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டும், வங்கி பணியில் நிரந்தர ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 28-ந்தேதி (நேற்று) தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் அறிவித்து இருந்தது.
வேலைநிறுத்தம்
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 56 வங்கி கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி கிளைகளில் பணிகள் நடைபெறாததால் வெறிச்சோடி காணப்பட்டன. மேலும் வங்கிகள் பூட்டப்பட்டு இருந்தன.
பெரம்பலூர் மாவட்ட பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், வங்கிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், வங்கி ஊழியர்களின் பணிசுமையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் லெனின், கிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்கள் அவதி
வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டத்தை அறியாமல் பொதுமக்கள் சிலர் வங்கிகளுக்கு வந்தனர். அப்போது வங்கிகள் பூட்டப்பட்டிருந்ததை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்த போராட்டத்தால் பொதுமக்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் கடும் அவதிப்பட்டனர். ஒரு சில வங்கி ஏ.டி.எம்.களில் மட்டும் பணம் இருந்ததால் அங்கு பொதுமக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் போராட்டம் குறித்து வங்கிகளின் முன்புற பகுதியில் உள்ள அறிவிப்பு பலகையில் நோட்டீசு ஒட்டப்பட்டு இருந்தது.
அரியலூரில்...
இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் பாரத் ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 46 வங்கி கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கி கிளைகளில் பணிகள் நடைபெறாததால் வெறிச்சோடி காணப்பட்டன. இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தனியார் வங்கி ஊழியர்களும் கலந்து கொண்டனர். வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, வங்கிகளில் பணம் போடவும், எடுக்கவும் வந்த பொதுமக்கள் பாதிப்பு அடைந்தனர்.