பாவூர்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை–பணம் கொள்ளை

பாவூர்சத்திரம் அருகே ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வீட்டில் நகை– பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2017-02-28 23:00 GMT
பாவூர்சத்திரம்,


ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்


நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூர் எஸ்.கே.ஆர்.பூங்கா தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 63). ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு கருப்பசாமி வீட்டில் வழக்கமாக தூங்கும் அறையில் தூங்காமல் பக்கத்து அறையில் தூங்கியுள்ளார். நள்ளிரவு நேரத்தில் வீட்டின் மாடி வழியாக உள்ளே மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் புகுந்தார்.

அங்கு இருந்த பீரோ சாவியை எடுத்து, பீரோவில் இருந்து பணம், தங்கநகைகளை எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது, சத்தம் கேட்டு எழுந்த கருப்பசாமி, அங்கு சென்று பார்த்த போது மர்ம நபர் நகை, பணத்துடன் தப்பி ஓடியுள்ளார். பின்னர் கருப்பசாமி பீரோவை பார்த்த போது, அதில் இருந்த ரூ.1.86 லட்சம், 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அவர் அதிர்ச்சி அடைந்தார்.

போலீசார் விசாரணை


இதுகுறித்து கருப்பசாமி பாவூர்சத்திரம் போலீசில் புகார் தெரிவித்தார். சப்–இன்ஸ்பெக்டர்கள் செல்வகுமார், ஹபிபுல்லா மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அங்கு இருந்து மோப்பம் பிடித்து சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்