பொதுமக்கள் சாலை மறியல் கல்குவாரிகளில் இருந்து தண்ணீர் எடுப்பதை தடை செய்ய வலியுறுத்தல்
ஸ்ரீவைகுண்டம் அருகே, கல்குவாரிகளில் இருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுப்பதை தடை செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம்,
சாலை மறியல்
ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரம் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகளில் தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்து செல்கின்றனர். இதனால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. எனவே கல்குவாரிகளில் முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தடை செய்ய வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பேட்மாநகரம் பரும்பு மெயின் ரோட்டில் நேற்று காலை 11.30 மணி அளவில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் அஸ்ரப் அலி பைஜி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் முகமது அலி, பொதுச்செயலாளர் சம்சுதீன், தொகுதி தலைவர் ஷேக், கிளை தலைவர் மும்தாஜ் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதனால் ஸ்ரீவைகுண்டம்– தூத்துக்குடி ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்தவுடன், ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் செல்வ பிரசாத், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கல்குவாரிகளில் இருந்து தனியார் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் எடுத்து செல்ல தடை விதிக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் 45 நிமிடம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.