தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தடை கோரி ஆர்ப்பாட்டம்
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க, வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு நிரந்தர தடை விதிக்க வலியுறுத்தி, தூத்துக்குடி, கோவில்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;
கோவில்பட்டி,
ஆர்ப்பாட்டம்
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் செயல்படும் வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் கடந்த 2005–ம் ஆண்டு முதல் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீரை உறிஞ்சி பயன்படுத்தி வருகின்றன. இதனால் நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்கள் விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும் போதிய தண்ணீர் கிடைக்கப் பெறாமல் அவதிப்படுகின்றனர்.
இதையடுத்து கடந்த 2016–ம் ஆண்டு வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க, ஐகோர்ட்டு தடை விதித்தது. இதனை நிரந்தர தடையாக அறிவிக்க வேண்டும். வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்கிய அனுமதியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். உள்நாட்டு குளிர்பானங்களையும், பாரம்பரிய உணவு பொருட்களையும் பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று காலையில் நடந்தது.
பாரம்பரிய குளிர்பானம்
நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மல்லிகா, ஒன்றிய செயலாளர் (பொறுப்பு) ராமசுப்பு, மாவட்ட குழு உறுப்பினர் விஜயலட்சுமி, நகரகுழு உறுப்பினர்கள் சக்திவேல் முருகன், அந்தோணி செல்வம், சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் கொம்பையா, ஜெயராமன், கட்டுமான தொழிலாளர் சங்கம் மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி, கோஷங்களை எழுப்பினர். பின்னர் பாரம்பரிய குளிர்பானமான நன்னாரி சர்பத் தயாரித்து, அனைவருக்கும் இலவசமாக வழங்கினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று காலையில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் ராஜா முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெருமாள், நகரக்குழு உறுப்பினர் தசலிஸ், ராமமூர்த்தி, சாம்பசிவன், செல்வன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து, இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
எட்டயபுரம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில், எட்டயபுரம் பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, நகர குழு உறுப்பினர் மாணிக்கம் தலைமை தாங்கினார். மாநில குழு உறுப்பினர் மல்லிகா, தாலுகா செயலாளர் ரவீந்திரன், தாலுகா குழு உறுப்பினர்கள் செல்வகுமார், பாலமுருகன், சி.ஐ.டி.யு. கண்ணன், கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை பாடையில் கட்டி தொங்கவிட்டு தூக்கி சென்று, நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அந்த குளிர்பானங்களை தரையில் கொட்டினர்.
ஸ்ரீவைகுண்டம்
இதே கோரிக்கையை வலியுறுத்தி ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் அருகில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளர் நம்பிராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ராமலிங் கம், சுவாமிதாஸ், ராமையா, சிலுவைமுத்து, முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி, கோஷங்களை எழுப்பினர்.