குறிப்பேடு விவரங்கள் முழுமையாக வெளியானால் முதல்–மந்திரி சித்தராமையா, வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும் எடியூரப்பா பேச்சு
குறிப்பேடு விவரங்கள் முழுமையாக வெளியானால் முதல்–மந்திரி சித்தராமையா வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்று எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு,
குறிப்பேடு விவரங்கள் முழுமையாக வெளியானால் முதல்–மந்திரி சித்தராமையா வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும் என்று எடியூரப்பா கூறினார்.
வெளியில் நடமாட முடியாத நிலைஎடியூரப்பா முன்னிலையில் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தினகர்ஷெட்டி, காங்கிரஸ் பிரமுகர் பிரமோத் ஹெக்டே உள்பட சிலர் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பா.ஜனதாவில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சிக் கொடியை வழங்கி எடியூரப்பா கட்சியில் சேர்த்து கொண்டார். அப்போது எடியூரப்பா பேசியதாவது:–
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கோவிந்தராஜ் எம்.எல்.சி. பெரிய உதவி செய்துள்ளார். அவருடைய வீட்டில் வருமான வரித்துறையினர் பறிமுதல் செய்த குறிப்பேடு(டைரி) தன்னுடையது தான் என்று ஒப்புக் கொண்டுள்ளார். இதன் மூலம் இன்னும் பல முக்கியமான விவரங்கள் வெளிவரும். இந்த குறிப்பேடு விவரங்கள் பகிரங்கமானதால், முதல்–மந்திரி சித்தராமையா தனது வீட்டைவிட்டு 3 நாட்கள் வெளியே வரவில்லை. குறிப்பேடு விவரங்கள் முழுமையாக வெளியானால் சித்தராமையா வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.
ரூ.65 கோடி லஞ்சம்இரும்பு மேம்பாலம் அமைக்கும் திட்டத்தில் ரூ.65 கோடியை சித்தராமையா லஞ்சமாக பெற்றுள்ளார். அது அவருடைய குடும்பத்தினருக்கு சேர்ந்துள்ளது. இந்த எல்லா விவரங்களும் குறிப்பேட்டில் உள்ளது. இதுபற்றி வாய்க்கு வந்தபடி பேசும் சித்தராமையா தைரியம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
குறிப்பேடு விவரங்கள் வெளியானதால் காங்கிரஸ் கட்சியினர் லெகர்சிங் வீட்டில் கிடைத்ததாக ஒரு குறிப்பேட்டு தகவல்களை வெளியிட்டனர். இதனால் காங்கிரசார் மக்களின் நகைப்புக்கு ஆளாயினர். 2013–ம் ஆண்டு லெகர்சிங் பா.ஜனதாவில் இருக்கவில்லை. நிலைமை இவ்வாறு இருக்கும்போது குறிப்பேடு எங்கிருந்து வந்தது?.
பா.ஜனதாவில் சேர ஆர்வம்கர்நாடகத்தில் பா.ஜனதாவுக்கு ஆதரவான நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இன்னும் பல தலைவர்கள் பா.ஜனதாவில் சேருவார்கள். மாநிலம் முழுவதும் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பா.ஜனதாவில் சேர ஆர்வம் காட்டி வருகிறார்கள். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமார் பங்காரப்பா உள்பட சில நிர்வாகிகள் விரைவில் பா.ஜனதாவில் இணைவார்கள்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.