ஜெயலலிதா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
ஜெயலலிதா பிறந்த நாள்விழா பொதுக்கூட்டத்தில் 500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் சேகர் எம்.எல்.ஏ. வழங்கினார்
பட்டுக்கோட்டை,
பட்டுக்கோட்டை நகர அ.தி.மு.க. சார்பில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் அறந்தாங்கி சாலையில் உள்ள காந்திசிலை அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர செயலாளர் சுப.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. அவைத் தலைவர் முத்து ராமன், நகர துணைச் செயலாளர் பிரகாசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் பிரபு வரவேற்றார். கூட்டத்தில் சி.வி.சேகர் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் தலைமைக் கழக பேச்சாளர் பஞ்சாட்சரம், முன்னாள் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சு.பாஸ்கர், முன்னாள் எம்.எல்.ஏ. பி.என்.ராமச்சந்திரன், முன்னாள் நகர சபை தலைவர் ஜவகர்பாபு, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மலைஅய்யன், ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் முருகானந்தம், முன்னாள் நகர செயலாளர்கள் சிவகுமார், பாரதி மற்றும் கட்சி நிர்வாகிகள், சார்பு மன்றத்தினர் கலந்து கொண்டனர்.
முடிவில் முன்னாள் நகர சபை உறுப்பினர் மாஸ்கோ நன்றி கூறினார்.