விவசாய நிலங்களுக்குள் புகுந்து 9 காட்டுயானைகள் அட்டகாசம் பட்டணா கிராம மக்கள் அதிர்ச்சி
பட்டணா கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து 9 காட்டுயானைகள் அட்டகாசம் செய்தன. இதனால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஹலகூர்,

காட்டுயானைகள் அட்டகாசம்
கர்நாடக மாநிலத்தில் இந்த ஆண்டு கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில், வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்காகவும், இரையைத் தேடியும் வனவிலங்குகள் வெளியேறி கிராமங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. அதுபோல் நேற்று மண்டியா மாவட்டம் மலவள்ளி தாலுகாவிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.
மலவள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்காகவும், இரையைத் தேடியும் கூட்டமாக வெளியேறிய 9 காட்டு யானைகள் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள பட்டணா கிராமத்திற்குள் புகுந்தன. அவைகள் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை பிடுங்கி தின்றும், காலால் மிதித்தும் நாசப்படுத்தி அட்டகாசம் செய்தன.
தோட்டத்தில் தஞ்சம்
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவைகள் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தஞ்சம் அடைந்தன. அவைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், காட்டுயானைகளை தோட்டத்தில் தஞ்சம் அடைந்துள்ளதால் மக்கள் பீதி அடைய வேண்டாம். அவைகளை விரைவில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி விடுவோம் என்று கூறினார்.