ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் ஏகஜோதி ஏற்றும் விழா

தஞ்சாவூர்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் குரு பங்காருஅடிகளாரின் 77-வது அவதார திருநாள் 3-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்களின் சார்பில் 23 ஆன்மிக ஜோதி ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால் மாவட்டங்களில் உள்ள தொண்டர்களின் வீடுகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டு பக்தர்கள் குடும்ப நலன் வேண்டி வழிபாடு செய்யப்பட்டது. இந்த 23 ஆன்மிக ஜோதிகளும் சீர்காழி விளந்திடசமுத்திரம் பகுதியில் உள்ள ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்துக்கு வந்தடைந்தது. அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கு பஞ்சபூத வழிபாடு மற்றும் பஞ்சபூத யாக குண்டங்கள் அமைத்து யாகம் நடைபெற்றது. இதில் ஏகஜோதி ஏற்றப்பட்டது. ஏகஜோதி ஏற்றும் விழாவை ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் வாசன் தொடங்கிவைத்தார். இதில் மாவட்ட துணைத்தலைவர் சேதுராமன், மாவட்ட செயலாளர் முத்துவேல், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், இணை செயலாளர்கள் குணாளன், பண்டரிநாதன், மேகலா, தணிக்கையாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் தென்னங்கன்றுகள், கல்வி உதவி, மருத்துவ உதவி, ஆடைதானம், அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சீர்காழி தெற்கு, வடக்கு வட்ட தலைவர்கள் பாரதி, மாரிமுத்து மற்றும் மன்றத்தினர், விளந்திட சமுத்திரம் மன்றத்தினர் செய்திருந்தனர். பின்னர் இந்த ஏக ஜோதி மேல்மருவத்தூருக்கு கொண்டு செல்லப்பட்டது.