மின்சார ரெயில்களில் ‘ரோமியோக்கள்’ தொல்லை பாதுகாப்பு வழங்க பெண் பயணிகள் கோரிக்கை
மின்சார ரெயில்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரிக்கும் வகையில் நாளுக்கு நாள் ‘ரோமியோக்களின்’ தொல்லை கூடிவருகிறது.
சென்னை,
மின்சார ரெயில்களில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்கள் அதிகரிக்கும் வகையில் நாளுக்கு நாள் ‘ரோமியோக்களின்’ தொல்லை கூடிவருகிறது. பாதுகாப்பு வழங்க பெண் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
10 லட்சம் பேர் பயணம்
தமிழ்நாட்டில் மக்கள்தொகை 7½ கோடியை தாண்டிவிட்டது. இதில், தலைநகர் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள புறநகர் பகுதியில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இத்தனை பேர் இங்கு வசிக்க காரணம் வாழ்வாதாரம் தான். எந்திரமயமாகிப்போன இவர்களின் வாழ்க்கையில், பணிக்காக தினமும் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று திரும்ப வேண்டிய நிலை இருக்கிறது.
அவர்களின் போக்குவரத்துக்கு முக்கிய பங்களிப்பது மின்சார ரெயில்கள் தான். சென்னையில் மின்சார ரெயில்கள், செங்கல்பட்டு - தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கும், திருவள்ளூர்-ஆவடி-கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்டிரல் மூர்மார்க்கெட் வளாகத்துக்கும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மின்சார ரெயில்களில் தினமும் 10 லட்சம் பேர் பயணிக்கின்றனர்.
பெண்களுக்கு சிரமம்
குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் மின்சார ரெயில்களில் கூட்டம் அலைமோதுகிறது. வேலைக்கு செல்பவர்கள் தாமதமில்லாமல் செல்ல வேண்டி இருப்பதால், கூட்டம் அதிகம் இருந்தாலும் வேறு வழியில்லாமல் வாசலில் தொங்கிக் கொண்டு ரெயில்களில் பயணிப்பதை தினமும் காண முடியும்.
ஆனால், ரெயில்களில் பயணிக்கும் பெண்களுக்குத்தான் அதிக சிரமங்கள் ஏற்படுகின்றன. பெண்களுக்கு என்று தனியாக பாதி பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தாலும், அதில் ஏறியது போக மீதமுள்ளவர்கள் பொதுப் பெட்டிகளில் தான் ஆண்களுடன் சேர்ந்து பயணிக்க வேண்டி இருக்கிறது. அப்போது, பெண் பயணிகள் அதிக அளவு இடர்பாடுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது.
ரோமியோக்கள் தொல்லை
குறிப்பாக, இளம்பெண்களுக்கு அருகில், தவறான எண்ணத்துடன் வரும் இளைஞர்கள் சிலர், அவர்களை இடிப்பது, உரசுவது போன்ற அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். இதுபோன்ற ரோமியோக்கள் குறித்து போலீசாரிடம் கூறலாம் என்றாலும், பெரும்பாலான ரெயில் நிலையங்களில் போலீஸ்காரர்களே இல்லை என்று பெண்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, குரோம்பேட்டையில் இருந்து எழும்பூருக்கு தினமும் மின்சார ரெயிலில் வந்து செல்லும் பெண் ஒருவர் கூறியதாவது:-
பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
மின்சார ரெயில்களில் கூட்டம் அதிகமாக இருப்பதை சாக்காக வைத்துக்கொண்டு இளைஞர்கள் பலர் பெண்கள் பக்கம் வந்து நின்று கொண்டு தொந்தரவு கொடுக்கின்றனர். உடல் அசைவுகளை ஆபாசமாகவும் வர்ணிக்கின்றனர். சில சமயங்களில் அது எல்லை மீறவும் செய்கிறது. சில நேரங்களில் ரெயில் புறப்படும் சமயத்தில் ஓடிவந்து பெண்கள் பெட்டியில் ஏறிக்கொள்கின்றனர். காரணம் கேட்டால், அவசரத்தில் ஏறிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், அவர்களின் பார்வை தவறாகவே இருக்கிறது.
முன்பெல்லாம் பெண்கள் பெட்டியில், பெண் போலீசார் ஒருவர் பாதுகாப்புக்கு வருவது உண்டு. ஆனால், இப்போது அவ்வாறு வருவதில்லை. இது அவர்களுக்கு சாதகமாகிவிடுகிறது. நாங்களும் புகார் தெரிவிக்கலாம் என்றால் முடியவில்லை. எனவே, ரெயில்களில் பயணம் செய்யும் பெண் பயணிகளின் பாதுகாப்பை ரெயில்வே நிர்வாகமும், ரெயில்வே போலீசாரும் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.