கண்ணமங்கலத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பங்கேற்பு

கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.

Update: 2017-02-28 22:30 GMT

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் புதிய பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசுகையில், ‘‘மக்களால் நான், மக்களுக்காக நான் என்று மக்களுக்காகவே வாழ்ந்து நம்மையெல்லாம் மீளாத துயரில் ஆழ்த்தி சென்ற முன்னாள் முதல்–அமைச்சர் ஜெயலலிதா என்றென்றும் மக்கள் மனதில் நிறைந்திருப்பார். அவரது வழியில் நல்லாட்சி தொடர்ந்திட பொதுமக்கள் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்’’ என்றார்.

கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் வக்கீல் சங்கர், கஜேந்திரன், திருமால், பாரிபாபு, கோவிந்தராஜன், தலைமை கழக பேச்சாளர்கள் காவேரி, ஜெமினி ராமச்சந்திரன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கண்ணமங்கலம் பால் கூட்டுறவு சங்க தலைவர் குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்