மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நாளை மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Update: 2017-02-17 22:11 GMT

மும்பை,

மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

பராமரிப்பு பணி

மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள தானே – கல்யாண் ரெயில் நிலையங்களுக்கு இடையே ஸ்லோ வழித்தடத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 11.20 மணி முதல் மாலை 4.20 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது. இதன் காரணமாக கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ மின்சார ரெயில்கள் காலை 10.48 மணி முதல் மாலை 4.23 மணி வரை முல்லுண்டில் இருந்து கல்யாண் வரை விரைவு வழித்தடத்தில் திருப்பி விடப்படும்.

இந்த ரெயில்கள் இவ்விரு ரெயில் நிலையங்களுக்கு இடையே தானே, திவா, டோம்பிவிலி ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். கல்யாண் செல்லும் ஸ்லோ மார்க்கத்தில் கல்வா, மும்ரா, கோபர், தாக்குர்லி ரெயில் நிலையங்களில் ரெயில் சேவை இருக்காது.

இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கல்யாண், டோம்பிவிலி, திவா சென்று பயணித்து கொள்ளலாம்.

விரைவு மின்சார ரெயில்கள்

பராமரிப்பு பணியின் போது சி.எஸ்.டி.யில் இருந்து செல்லும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 10.20 மணி முதல் பிற்பகல் 2.42 மணி வரை காட்கோபர், விக்ரோலி, பாண்டுப், முல்லுண்டு, திவா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

சி.எஸ்.டி. நோக்கி வரும் விரைவு மின்சார ரெயில்கள் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.08 மணி வரை திவா, முல்லுண்டு, பாண்டுப், விக்ரோலி, காட்கோபர், குர்லா மற்றும் வழக்கமான ரெயில் நிலையங்களில் நின்று வரும்.

துறைமுக வழித்தடம்

துறைமுக வழித்தடத்தில் குர்லா – வாஷி இடையே இருமார்க்கத்திலும் காலை 11.10 மணி முதல் மாலை 4.10 மணி வரை பராமரிப்பு பணி நடக்கிறது.

இதன் காரணமாக சி.எஸ்.டி.யில் இருந்து பன்வெல், பேலாப்பூர், வாஷி செல்லும் ரெயில்கள் காலை 10.35 மணி முதல் பிற்பகல் 3.37 மணி வரையும், மேற்கண்ட இடங்களில் இருந்து சி.எஸ்.டி. நோக்கி வரும் ரெயில்கள் காலை 10.20 மணி முதல் பிற்பகல் 3.48 மணி வரையும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இருப்பினும் சி.எஸ்.டி. – குர்லா இடையேயும், வாஷி – பன்வெல் இடையேயும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். பராமரிப்பு பணியின் போது துறைமுக வழித்தட பயணிகள் டிரான்ஸ்ஹார்பர் மற்றும் மெயின் வழித்தட மின்சார ரெயில்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயணித்து கொள்ளலாம். இந்த தகவல் மத்திய ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்