தொழில் சார்ந்த வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை இணை மந்திரி கிரிராஜ்சிங் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் சார்ந்த வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருவதாக இணை மந்திரி கிரிராஜ்சிங் கூறினார்.
கருத்தரங்கு
கிருஷ்ணகிரி மாவட்ட சிறு, குறுந்தொழிற்சாலைகள் சங்கம் சார்பில் ஓசூரில் தேசிய அளவில் தொழில் மற்றும் கட்டிட கலை சார்ந்த கண்காட்சி, கருத்தரங்கு நேற்று தொடங்கியது. மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சக இணை மந்திரி கிரிராஜ்சிங் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது:-
உற்பத்தியாளர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மத்திய அரசு தயாராக உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தேவையான தொழில் சார்ந்த வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேம்பாலங்கள்
மத்திய கயிறு வாரிய தலைவரும், பா.ஜனதா முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன் பேசும் போது, ஓசூரில் 5 இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓசூர் வழியாக பெங்களூருவுக்கு மெட்ரோ ரெயில் இயக்கவும் பரிசீலனையில் உள்ளது. ஓசூர் பகுதியை மையமாக கொண்டு கன்டெய்னர் டெப்போ உருவாக்கப்படும். இதன் மூலம் கொச்சி வரை உள்ள துறைமுகங்களுக்கு சரக்குகளை எளிதில் கொண்டு செல்ல முடியும் என்றார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசியல் சூழ்நிலை தடுமாற்றத்தில் உள்ளது. இதற்கு, சிலரது பதவி ஆசை தான் காரணம். ஒட்டுமொத்த அரசியல் சூழ்நிலையை புரிந்து கொண்டு, சட்டம் என்ன சொல்கிறதோ அதை கவர்னர் செய்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார். இந்த கருத்தரங்கில் கூடுதல் தொழிற்சாலைகள் ஆலோசகர் சண்முகநாதன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.