பயிர் மகசூலை கணக்கீடு செய்யும் பணி; கலெக்டர் ஆய்வு

பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016-17-ம் ஆண்டிற்கு பயிர் மகசூலை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Update: 2017-02-17 22:00 GMT
அரியலூர்

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், தவுத்தாய்குளம் கிராமத்தில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் 2016-17-ம் ஆண்டிற்கு பயிர் மகசூலை கணக்கீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட கலெக்டர் சரவணவேல்ராஜ் ஆய்வு செய்தார்.

அதன்பின் அவர் நிருபர்களிடம் கூறும்போது, தற்போது பயிர் அறுவடை சோதனைகள் உதவி வேளாண்மை அலுவலர்கள், கிராமநிர்வாக அலுவலர்கள், புள்ளியியல் துறை அலுவலர்கள் மற்றும் இந்திய வேளாண் பயிர்காப்பீட்டுக் கழக பிரதிநிதிகள் முன்னிலையில் செய்யப்பட்டு வருகிறது. திருமானூர் வட்டாரத்தில், வாரணவாசி கிராமத்தில் வேலு என்ற விவசாயியின் வயலில் நெற்பயிரில் பயிர் அறுவடை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், உலர் எடையை உறுதி செய்ய வேண்டி 2 கிலோ அறுவடை செய்யப்பட்ட நெல் தானியங்களும் சோதனைக்காக எடுத்து செல்லப்பட்டது என்று கூறினார். ஆய்வின்போது கலெக்டருடன், வேளாண்மை இணை இயக்குனர் சதானந்தம், வேளாண்மை துணை இயக்குனர் மனோகரன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர். 

மேலும் செய்திகள்